எவ்வாறாயினும், தற்போது வீசிவரும் பலத்த காற்றின் காரணமாக நாட்டின் வேறு சில நகரங்களிலும் நேற்றுமுன்தினம் வீடுகள் சேதமடைந்திருந்தன. இந்த நிலையில், இவ்வாறான சீரற்ற காலநிலைக்கு முகாம் குடில்கள் எந்தவிதத்தில் தாக்குப்பிடிக்கக் கூடியவையல்ல எனத்தெரியவருகிறது.
சேதமடைந்த சுமார் 2000 குடில்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் தற்போது பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாகவும், இந்தச் சிக்கலை நிவர்த்தி செய்வதில் தற்போது தொண்டு நிறுவனங்கள் அவசரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது