இனச் சுத்திகரிப்பை எந்தத் தடையுமின்றி நடத்திவரும் நாடுகளில் ஒன்றான இலங்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பிரித்தானியா விரும்புகிறது என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவிக்கிறார். இலங்கை மீது அக்கறை காட்டும் இவ்வாறான நாடுகளின் அதிகார வர்க்கங்களை நம்பும் குறும் தேசிய வாதிகளும் இன அழிப்பின் மறைமுகக் காரணிகள் என்பது டேவிட் கமரனின் பயணம் அவர்களுக்கு வெளிப்படையாகச் சொல்கிறது.
உலகத்தின் மூலைகளெல்லாம் அமரிக்க அரசின் நிகழ்ச்சி நிரலோடு இணைந்து ஆக்கிரமிப்புப் பசியோடு உலா வரும் பிரித்தானிய அரசிற்கு இனப்படுகொலை நடைபெற்று நான்கு வருடங்களின் பின்பு கடுமையான செய்தியின் தேவை ஏற்பட்டுள்ளது.