Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கடாபி கொல்லப்பட்டு ஒருவருடத்தின் பின்னர் லிபியாவில் அமரிக்கத் தூதரகங்கள் தாக்கப்பட்டன

அமரிக்க ஆதரவுப் படைகளால் லிபிய அதிபர் கடாபி கொல்லப்பட்டு ஒரு வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் லிபியாவில் அமரிக்கத் தூதரகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஆயுதமயப்படுத்திய நேட்டோ படைகள் நான்கு தசாப்தங்களாக ஆட்சியிலிருந்த கடாபியை கொலைசெய்ய பின்புலத்தில் செயற்பட்டன. முகமது நபியை அவதூறு செய்யும் வகையிலான அமரிக்கத் திரைப்படதிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே லிபிய நகரங்களிலிருந்த தூதரகங்களை சில குழுக்கள் தாக்யுள்ளன. பென்காஸியில் தூதரகக் கட்டிடங்களைத் தீமூட்டினர்.
அமரிக்கத் தூதரகங்கள் மீதான தாக்குதல்களின் போது கடாபி ஆதரவு முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

இதேவேளை உள்துறை அமைச்சு செயலகத்தின் முன்னால் கார் ஒன்றில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது இருவர் பலியாகியிருக்கலாம் எனத் தெரியவருகிறது.

Exit mobile version