Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கடாபியைக் கொன்றவர்களுக்குத் தண்டனை வழங்குவோம் : புதிய ஆட்சியாளர்கள்

லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியை கொன்றவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என்று புதிய ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும், உயிருடன் பிடிபட்ட கடாபியை கொன்றது ஏன் என்று நாடுகள் கேள்வி எழுப்பி உள்ளது. இந்நிலையில், கடாபியை கொன்றவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய அரசு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இதுகுறித்து மாற்று கவுன்சில் அதிகாரிகள் கூறுகையில், கடாபியை உயிருடன் பிடித்து வராமல் கொன்றவர்கள் மீது லிபிய அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று மற்றவர்கள் சொல்லும் வரை நாங்கள் காத்திருக்க மாட்டோம். கடாபி கொலை பற்றி ஏற்கனவே விசாரணையை தொடங்கி விட்டோம்.
போர் குற்றவாளிகளை எப்படி நடத்துவது என்பதற்கான நடத்தை விதிமுறைகளை நாங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளோம். எனினும், கடாபியை கொன்றது தனிப்பட்ட செயல். இதில் “புரட்சிப் படையினருக்கோ” அல்லது லிபிய தேசிய ராணுவத்துக்கோ தொடர்பில்லை என்றனர்.
கடாபியுடனான தனது உறவுகளை மறைக்கும் நோக்கோடு கடாபியி பயணம் செய்த வாகனத்தின் மீது விமானக் குண்டுகளை வீசி அவரை கொன்றவர்கள் மேற்கு நாடுகளின் படைகளே. கொலைசெய்தவர்களே தண்டனை வழங்கும் அனீதியிலிருந்தே புதிய லிபியாவின் ஆட்சி ஆரம்பமாகிறது.

Exit mobile version