Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கடாபியின் மகன் சயீப் அல்-இஸ்லாம் கைது

கடாபியின் மற்றொரு மகனும், ராணுவ கமாண்டருமான சயீப் அல்-இஸ்லாம் (39) தலைமறைவானார். அவரை புரட்சிபடை தொடர்ந்து தேடி வந்தது. இந்த நிலையில், தெற்கு லிபியாவில் ஒபாரி நகரில் இருந்து 50 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பாலைவனத்தில் பதுங்கியிருந்த போது நேட்டோ கூலிப்படைகளிடம் சிக்கினார்.

அப்போது அவருடன் 15 உதவியாளர்கள் இருந்தனர். இவர்கள் 3 வாகனங்களில் இருந்தனர். அவர்களுக்கு பின்னால் 2 கார்கள் வந்தன. அதில் சயீப் அல்- இஸ்லாமும் மற்றும் 4 பேரும் இருந்தனர். அவர்களிடம் நேட்டோ கூலிப்படை அகமது என்பவர் நீங்கள் யார்? எங்கு செல்கிறீர்கள் என விசாரித்தார். அப்போது அவர்களில் ஒருவன் சயீப் அல்- இஸ்லாமை காட்டி இவரது பெயர் அப்துல்கலாம். இவர் ஒரு சமாதான தூதுவர் என்றான். இதற்கிடையே, சயீப் அல்- இஸ்லாமை நேட்டோ கூலிப்படைகள் அடையாளம் கண்டு கொண்டது.
இது குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளிவருகின்றன.

Exit mobile version