
சயீப் அல் இஸ்லாம் – கடாபியின் மகன் கைது குறித்து மேற்கு ஊடகங்கள் செய்திகளைப் பரப்ப ஆரம்பித்துவிட்டன. பிரித்தானியாவில் கலாநிதிப் பட்டம் பெற்றவரான அல் இஸ்லாம் ரொனி பிளேயர் பிரதமராகவிருந்த வேளையில் அவரின் நண்பராகக் கூடக் கருதப்பட்டவர்.
இக் கைதின் பின்னணியில் வேறு அரசியல் “காய் நகர்த்தல்களும்” காணப்படலாம் என லிபிய வட்டாரங்களில் கருத்து நிலவுகிறது.
அல் இஸ்லாமைக் கைது செய்த நேட்டு கூலிப்படையான ஸிந்தான் , லிபியாவில் புதிய அரசு உருவாகும் வரை யாரிடமும் ஒப்படைக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.
ஸிந்தான் படைப்பிரிவு அமரிக்காவால் லிபியாவில் சீர்குலைவை ஏற்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்பட்ட படையணிகளுள் ஒன்று. ஏனைய படை அணிகளைப் போன்றே அளவில் சிறிதானாலும், ஏனைய குழுக்களை விட்ப்பலமான அணி.
லிபியாவில் முன்னை நாள் அல் கயீதா இராணுவத்தச் சேர்ந்தவரும் இஸ்லாமிய அடிப்படைவாதியும், அமரிக்காவின் நம்பிக்கைக்கு உரியவருமான திரிப்போலி இரணுவத் தலைவர் அப்டெல் ஹக்கீம் பெல் ஹட்ஜ் மிகுந்த அதிகாரம் உடையவராகக் காணப்படுகிறார். தவிர லிபியாவின் பிரதமர் அப்துல் ரயீம் அல் எல் கேயிப் ஸிந்தான் படையுடன் உடன்படாதவராகக் காணப்பட்டார்.
அல் இஸ்லாம் – கடாபியின் மகன் – கைதாவதற்கு 24 மணி நேரத்தின் முன்பாக ஸிந்தான் படையணியின் தலைவர் அப்துல் நேக்கர், தமக்குப் பாதுகாப்புப் படையின் தலைமைப்பதவி தராவிட்டால் எந்த அரசையும் ஆட்ச்சியமைக்க அனுமதிக்க மாட்டோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
தவிர கடாபி ஆட்சிபுரிந்த காலங்களில் இஸ்லாமிய அடிப்படைவாதக் கருத்துக்கள் லிபியாவில் ஆதிக்கம் செலுத்தவில்லை. மதம் மக்களை ஆளும் சக்தியாக அமைந்திருக்கவில்லை. ஸிந்தான் படைப்பிரிவின் தலைவர் இதனை வெளிப்படையகவே கூறியிருந்தார். பெல் ஹட்ஜ் இன் இஸ்லாம் எமக்குப் பொருந்தாது என்றும் காட்டாரின் இஸ்லாமிய அதிகாரமோ ஏனைய நாடுகளோ எமக்குப் ஆலோசனை கூறத்தேவையில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
இவை அனைத்தினதும் பின்னணியில் ஸிந்தான் படைப்பிரிவிற்கும் கடாபியின் மகன் சாயிப் அல் இஸ்லாமிற்கும் இடையேயான நிழல் ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையிலான நாடகமே இக் கைது என அரசியல் ஆய்வாளர்களால் சந்தேகிக்கப்படுகிறது.
லிபியாவின் தேசிய இராணுவத்தில் இணைந்துகொள்ள ஸிந்தன் இராணுவக் குழு மறுத்துள்ளதாகவும், திரிப்பொலியை கைப்பற்றுவதற்கு முனைவதாகவும் இறுதியாகக் கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.