Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கடலின் நடுவே பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டவர்கள்:அகதிகள் அனாதைகள் அல்ல – போராட்டம்

boatrefugeesசர்வதேசச் சட்டங்களுக்கு முரணாக அவுஸ்திரேலிய அரசு 153 அரசியல் அகதிகளையும் இலங்கை அரசிடம் ஒப்படைகின்றது. போர்க்குற்றவாளிகள் ஆட்சிசெய்யும் அரசு என்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட இலங்கை அரசிடமிருந்து தப்பி அவுஸ்திரேலியா நோக்கி வந்தவர்களில் 37 பேர் குழந்தைகள், 32 பேர் பெண்கள். குழந்தைகளோடு தமது சொந்த மண்ணைவிட்டு உயிரைத் துச்சமென மதித்து இவர்கள் அவுஸ்திரேலியா நோக்கிச் செல்கிறார்கள் என்றால் அவர்கள் இனப்படுகொலை அரசிடமிருந்து தப்பிச் செல்வதே பிராதான நோக்கமாகக் கொண்டவர்கள். இவர்கள் நடுக்கடலில் வைத்துஅவுஸ்திரேலிய அரச படைகளால் கேள்விகள் கேட்கப்படுகிறார்கள்.

வெளியுலகத் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு கிரிமினல்கள் போல நடத்தப்படுகிறார்கள். நீர்ப்பரப்பில் தஞ்சம் கேட்டவர்களை பயங்கரவாதக் குற்றங்கள் புரிந்த கிரிமினல்கள் போல சட்டவிரோதமாக நடத்துவதையும், சட்டவிரோதமாக இலங்கை அரசிடம் கையளிப்பதையும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் முகவர் நிலையம் அண்ணார்ந்து பார்த்துக்கொண்ட்ரிக்கிறது. அவர்களைத் தொடர்புகொண்ட போது தமக்கு அமைப்புக்கள் எதுவும் கோரிக்கை விடுக்காமையால் தாம் தலையிட வாய்ப்ப்பில்லை என்கின்றனர்.

தமிழ் அகதிகளுக்கான போராட்ட அமைப்புக்குழு அருகருகே அமைந்திருக்கும் மற்றும் அவுஸ்திரேலிய தூதரகம் ஆகியவற்றின் முன் லண்டனில் போராட்டம் ஒன்றை 7ம் திகதி திங்களன்று அறிவித்துள்ளது.

அலைகடலின் நடுவே அனாதைகளாகக் கைவிடப்பட்டபட்ட பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் மட்டுமல்ல உலக நாடுகள் முழுவதிலும் இது தொடராலாம். உலகில் மனித உரிமை பேசும் அனைத்து நாடுகளும் அகதிகள் விவகாரத்தில் அம்பலப்பட்டுப் போயின. ஆக, இப் போராட்டம் முக்கியத்துவமுடையது. இன்றைய மௌனம் எதிர்காலத்தை இருளுக்குள் அமிழ்த்தும்.

Exit mobile version