Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கடற்படையினரின் கெடுபிடியினால் ஊர்காவற்துறை மக்கள் அவதி!

 
 
    யாழ்ப்பாணத்தில் பல அதியுயர் பாதுகாப்பு வலயங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, பாதுகாப்பு கெடுப்பிடிகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், ஊர்காவற்துறை கடற்படை முகாமுக்கு எதிரில் உள்ள வீதி திறக்கப்படாததன் காரணமாக 10 கிலோ மீற்றர் தூரம் சென்று அராலி வழியாக ஊர்காவற்துறைக்கு செல்ல வேண்டியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலைமை குறித்து அரசியல்வாதிகள் ஊடாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் அடுத்து பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாத்திரம் இந்த வீதி வழியாக பயணிக்க இடமளிக்கப்பட்டுள்ளது. எனினும், 
 
   பொதுமக்களின் பயணத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், தமது அன்றாட வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தவிர கடற்படையினர் அநாவசியமாக தமது அதிகாரத்தை பயன்படுத்தி, திடீரென மக்களை கைதுசெய்வதாகவும், அநாவசியமான முறையில் தாக்குதல் நடத்துவதாகவும் தெரியவருகிறது. இவ்வாறு கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளான இருவர் ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடற்படையினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்துள்ள கடற்படையின் பேச்சாளர் கப்டன் அத்துல சேனரத், கடற்படை முகாமுக்கு எதிரில் உள்ள வீதி மூடப்பட்டிருந்த போதிலும் முகாமைச் சுற்றிவுள்ள வீதியில் பயணிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

ஊர்காவற்துறையின் பாதுகாப்பு கடற்படையினரின் பொறுப்பில் இருப்பதால், அவர்கள் ஒருபோதும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதில்லை எனவும் சேனரத் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version