Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கடந்த 10ஆண்டு களில் கடன் தொல்லையால்,1.83லட்சம் விவசாயிகள் தற்கொலை: நம்மாழ்வார்.

19.03.2009.

கடன்தொல்லை தாங்  காமல் 1.83லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியுள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-

நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகியும் சரியான உணவுக்கொள்கை வகுக்கப்படவில்லை. கடந்த 10ஆண்டுகளில் கடன் தொல்லையால், அநியாய வட்டி கொடுத்து மீள முடியாமல் 1லட்சத்து 83ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பூச்சிமருந்து அடிப்பதால் பயிர்களை விஷத்தன்மை தாக்குகிறது. இதனால் உணவுக்கு செலவழிப்பதை விட அதிகமாக மருத்துவத்திற்கு செலவழிக்க வேண்டியுள்ளது. ரசாயன உரங் களை போடுவதால் நமது நிலத்தில் பாதி பயனற்றதாகி விட்டது. இதனால் சிறுநீரக பாதிப்பு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன என்றார்.

Exit mobile version