Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கடத்தப்பட்ட லலித் குகன் கொல்லப்பட்டனரா : வலுவடையும் சந்தேகங்கள்

யாழ்ப்பாணத்தில் கடந்த டிசம்பர் 9 ஆம் திகதி முதல் காணாமல் போன மக்கள் போராட்டக் குழு உறுப்பினர்கள் இருவரையும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்ததகவலை பொலிஸ்மா அதிபர் தமக்கு அறிவித்துள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
லலித்குமார் மற்றும் குகன் ஆகிய இரண்டு தமிழ் உறுப்பினர்கள் காணாமல் போனமை தொடர்பில், 10 பேரின் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் எனினும், முக்கிய தடயங்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை என்று நிமல் சிறிபால டி. சில்வா குறிப்பிட்டார்.
இந்த நிலையில் அரச படைகளால் கடத்தப்பட்டதாகக் கருதப்படும் இவர்கள் கொலைசெய்யப்பட்டிருக்கலாமா என்ற சந்தேகங்கள் மேலோங்குகின்றன.

Exit mobile version