Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கடத்தப்பட்ட அனுபவத்தை விபரிக்கும் திமுது ஆட்டிகல

ராஜபக்ச அரசின் இராணுவ அடியாட்களால் கடத்திச் செல்லப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் பெண்கள் பிரிவிவைச் சேர்ந்த திமுது ஆட்டிகல தாம் கடத்தப்பட்ட அனுபவத்தை விபரித்தார்.

சோசலிசக் கட்சியின் அவசர ஊடகவியலார் சந்திப்பொன்று மாதிவெலயிலுள்ள கட்சியின் தலையகத்தில் நடைபெற்றது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த திமுது ஆட்டிகல, வெள்ளை வேனில் கடத்திய தன்னிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தியதாகவும் பின்னர் முகாம் போன்றவொரு இடத்திற்கு கொண்டுசென்றதாகவும் திமுது இதன்போது தெரிவித்தார்.
குறித்த இடம் மிகவும் பாதுகாப்பு மத்தியில் இருப்பதை தான் உணர்ந்ததாகவும், நீண்ட நேரம் விசாரணை நடத்திய பின்னர் ஒரு அறையில் வைத்து தன்னைப் பூட்டிவைத்திருந்ததாகவும் திமுது ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
பின்னர் மீண்டும் தன்னிடம் விசாரணை நடத்திய போது அங்கு குமார் குணரத்னவும் இருந்தார். அதன்பின்னர் இருவரிடமும் விரிவான விசாரணை நடத்தப்பட்டது.
அதன்பின்னர் 07ஆம் திகதி இரவு என்னை மீண்டும் வாகனத்தில் ஏற்றி வேறொரு இடத்திற்குக் கொண்டுசென்றனர். இன்று காலை வரை அங்கேயே இருந்ததாகவும் திமுது ஆட்டிக்கல இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விபரித்தார்.
சம்பவத்தை மேலும் விபரித்த திமுது,
நேற்றிரவு அதிகாரியொருவர் என்னைச் சந்திக்க வந்தார். குமார் சகோதரரை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்புவதாகவும், அவரது கடவுச்சீட்டில் பிரச்சினையொன்று இருப்பதாகவும் அவர் என்னிடம் கூறினார். அவர் ஒரு அவுஸ்திரேலிய பிரஜை. டிபோட் செய்கிறோம். நீங்கள் எங்கே போக வேண்டும் என என்னிடம் கேட்டனர். மாதிவெல அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என நான் பதிலளித்தேன்.

இந்த கடத்தல் அரசுக்கோ, பாதுகாப்பு தரப்பினருக்கோ தொடர்புடையதல்ல என தொடர்ச்சியாக கூற முற்பட்டனர். அவர்கள் விசாரிக்கும் போதெல்லாம். அரசுக்கு தேவை நாங்கள் ஆயுதக் குழுவா புலிகளுடன் தொடர்பு உள்ளதா என தெரிந்து கொள்ளவே என நான் அடிக்கடி அவர்களிடம் கூறினேன். அதன்போதெல்லாம் அரசாங்கம் என்று சொல்ல வேண்டாம். அரசுக்கு தொடர்பு இல்லை. நீங்கள் வெளியில் சென்று இதற்கு கோட்டாபயவை தொடர்புபடுத்தி தகவல் வெளியிடுவீர்கள் என எமக்குத் தெரியும். ஆனால் அவர்கள் தொடர்பில்லை என்று கூறினர். தொடர்ந்தும் அதனை வலிறுத்தினர். அரச அதிகாரம் இல்லாமல் ரி-56 ரக துப்பாக்கிக் கொண்டு இவ்வாறான செயல்களில் உங்களால் ஈடுபட முடியுமா என நான் கேட்டேன். அதற்கு அவர்கள் பதிலளிக்கவில்லை.

அலுவலகத்திற்கு கொண்டுசென்று விடமுடியாது. அலுவலகம் அருகில் அழைத்துச் செல்கிறோம், அங்கிருந்து முச்சக்கர வண்டியொன்றில் அலுவலகத்திற்குச் செல்லுங்கள் எனக் கூறினார். தலபத்பிட்டிய வீதியின் குறுக்கு வீதியொன்றில் வாகத்தை நிறுத்தினர். எனினும், வாகனத்தின் செல்வதற்குத் தயாராக இயந்திரம் இயங்கிக்கொண்டிருந்தது. என்னை அப்போது இறக்கிவிட்டு மறுபக்கம் திருப்பச் சொன்னார்கள். வாகனம் செல்லும் வரை மறுபக்கம் திரும்பிப் பார்க்கக் கூடாது எனக் கட்டளையிட்டனர். கட்டப்பட்டிருந்த கண்களை அவிழ்த்து, என்னை இறக்கிவிட்ட பின்னர் வாகனம் சென்றது.
நான் அந்த வாகனத்தைப் பார்த்தேன். எனினும் அதன் இலக்கம் எனக்குத் தெரியவில்லை. இருபத்தி எட்டு, ஒன்று என்பதைப் போல ஒரு இலக்கத்தைக் கண்டேன். இலக்கத்தைப் பார்ப்பதினால் எந்தப் பயணம் இல்லையென அவர்களே கூறினார்கள். என திமுது ஆட்டிகல தான் கடத்தப்பட்டு, விடுவிக்கப்பட்ட சம்பவத்தை விபரித்தார்.

Exit mobile version