Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கச்சத்தீவை மீட்க வேண்டுமாம் – திமுக பாராளுமன்றத்தில் கோரிக்கை.

1974-ல் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த போது அவரின் சம்மதத்தோடுதான் இந்திரா காந்தி கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தார். அன்று மௌனமாக இருந்த கருணாநிதி ஈழத்தில் நடந்த படுகொலைகளின் தனக்கு எழுந்துள்ள அவப்பெயரையும் களங்கத்தையும் கழுவ கச்சத்திவு பற்றி நாடகமாடத் துவங்கியுள்ளார். விரையில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் ஈழத் தமிழர் பிரச்சனை பிரதான பிரச்சார விஷயமாக மாறும் பட்சத்தில் அதை நாடகங்கள் மூலம் எதிர்கொள்ள திமுக தயாராகிவருகிறது. இந்நிலையில் கச்சச்தீவு பகுதியில் தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கச்சத் தீவை திரும்பப் பெற வேண்டும் என்றும் திமுக வலியுறுத்தியுள்ளது.இன்று மக்களவையில் இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன்மீது பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு,கச்சத் தீவு மீதான தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு இலங்கையுடனான உடன்பாட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும்.தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்காக கடலோர காவல்படையிரின் ரோந்து அதிகரிக்கப்பட வேண்டும்.பிரச்சனைகளை உடனுக்குடன் பேசித் தீர்க்க மத்திய அரசு, தமிழக அரசு, இலங்கை அரசு மற்றும் தமிழக மீனவர்கள் கொண்ட ஒருங்கிணைந்த அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.கச்சச்தீவு பகுதியில் தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கச்சத்தீவை இந்தியா திரும்ப பெற வேண்டும் என்றார்.விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்துமகா கடல் பகுதியை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்தப் பகுதியில் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடும் மீனவர்களின் நலனும் பாதுகாக்கப்படும்.தற்போது இலங்கை சென்றுள்ள வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ், தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் பேசுவார். வரும் அக்டோபர் மாதம் நான் இலங்கை செல்ல இருக்கிறேன். அப்போது இலங்கை அரசுடன் தமிழக மீனவர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவேன் என்றார்.

Exit mobile version