Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கசால பெரேரா மாவத்தையாகும் பெரியகுளம் அரசினர் பாடசாலை வீதி

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் வடக்கில் புதிதாக பௌத்த விகாரைகளை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே வட பகுதியில் புதிய பல விகாரைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியிலும் மற்றொரு பாரிய பௌத்த விகாரையை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விகாரைக்கான தூபியை அமைப்பதற்கு மண் குவிக்கப்பட்டு வருவதுடன் அப்பகுதி முள்ளுக்கம்பி வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

அதேவேளை பெரியகுளம் அரசினர் பாடசாலை வீதியை, கசால பெரேரா மாவத்தை என்று சிங்களத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு சீமெந்து நடுகல் ஒன்றும் நாட்டப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது.

Exit mobile version