Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஓ‌சீடியா ; அப்காஷியா பகுதிகளை ரஷ்யா அங்கீகரித்த முடிவை திரும்பப் பெற முடியாது:ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ்.

02.09.2008.
ஜார்ஜியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு ஓ‌சீடியா மற்றும் அப்காஷியா பகுதிகளை ரஷ்யா அங்கீகரித்த முடிவை திரும்பப் பெற முடியாது என்று ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் முன்னணி தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு நேற்று மெத்வதேவ் அளித்துள்ள பேட்டியில், சட்டப்பூர்வமாக பார்க்கும் போது தெற்கு ஒசீடியா, அப்காஷியா ஆகிய புதிய மாநிலங்கள் உருவாகிவிட்டது. எனினும் அது நடைமுறையில் இடம்பெற சிறிது காலம் ஆகும் என்றாலும், இவ்விஷயத்தில் ரஷ்யா தனது முடிவை மாற்றிக் கொள்ளாது என்றார்.

சர்ச்சைக்குரிய பகுதியில் அமைதியை நிலைநிறுத்துவதே ரஷ்யாவின் திட்டம் என்று குறிப்பிட்ட மெத்வதேவ், அதற்கு தேவையான நடவடிக்கைகள் தமது அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்றார்.

Exit mobile version