2009-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு. அமெரிக்க அதிபரான பாரக் ஓபாமாவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆணு ஆயுதக் குவிப்பிற்கு எதிராகவும், உலக சமாதானத்திற்காக உழைத்ததற்காகவும் இவ்விருது அவருக்கு வழங்கப்படுகிறது. டிசம்பர் 10-ஆம் தியதி ஓஸ்லோவில் நடைபெறும் விழாவில் இவ்விருதை அவர் பெற்றுக் கொள்கிறார். உலகெங்கிலும் உள்ள மூன்றாம் உலக நாடுகளை தனது அறிவிக்கப்படாத காலனிப் பகுதிகளாக அமெரிக்கா சந்தை நலன் கருத்து வைத்திருப்பது குறிப்பிடத் தக்கது. என்பதுவல்லாமல் மத்தியகிழக்கிலும், ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும், கொடூரமான நேரடி மறைமுக யுத்தங்களை அமெரிக்கா நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.