Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வெலிவேரியப் படுகொலைகளின் முதலாமாண்டு நிறைவு

weliveriaநேற்று- 01.07.14 – லண்டனில் மன்னார்க் கடலை சூறையாடும் வேதாந்தா நிறுவனத்திற்கு எதிரன போராட்டத்தில் தமிழர்களும் இணைந்துகொண்டார்கள்.

இலங்கையில் மன்னார் கடற்படுக்கையில் எண்ணை வளத்தை அபகரிக்கும் வேதாந்த நிறுவனத்துடன் இணைந்து செயற்படும் மற்றொரு நிறுவனமான ஹேலிஸ் வெலிவேரியவில் கையுறை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறது. இந்த நிறுவனத்தின் கழிவு நீர் வெலிவேரிய மக்களின் குடிநீரை அழுக்காக்கி வருகிறது. மக்கள் குடிநீருக்காக ஹெலிஸ் நிறுவனத்திற்கு எதிராக கடந்த வருடம் ஓகஸ்ட் முதலாம் திகதியன்று போராட்டம் நடத்தினார்கள். அமைதியாகப் போராட்டம் நடத்திய மக்கள் மீது இராணுவம் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிப்பிரயோகம் நடத்திற்று.

நேற்று வெலிவேரியப் படுகொலைகளின் முதலாவது ஆண்டு நிறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
வெலிவேரியப் படுகொலைகளைத் தொடர்ந்து சிங்களக் கிராமங்கள் எங்கும் ராஜபக்சவிற்கு எதிரான போராட்டம் பரவிய வேளையில் மக்களை வீட்டுக்குள் முடங்கியிருக்குமாறும் ஐ.நாவைப் பிடித்து நீதிவாங்கத்தருவதாகவும் கூறியவர்களுள் கூட்டமைப்பின் சுமந்திரன் முக்கியமானவர். மக்கள் போராட்டங்களை ஐ.நாவைக் காட்டி ஒடுக்கி சிங்கள மக்களுக்கும் துரோகமிழைத்தவர் சுமந்திரன். மக்கள் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டது மட்டுமல்ல கொல்லப்பட்டவர்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை.

மேலும் தெரிந்துகொள்ள:

வெலிவேரியக் கொலைகளின் பின்புலத்தில் வெளிவராத மர்மம்

வெலிவேரிய தாக்குதலில் 05 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் : விஜித ஹேரத்

Exit mobile version