Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஒரு போத்தல் விஸ்கி வாங்கினால் ஒரு சிகரட் இலவசம் : லெபாரா மொபைல்

charity-commission-1லைக்கா மோபைல் நிறுவனம் இலங்கை பேரினவாத அரசுடன் இணைந்து செயற்படுவது குறித்த செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் போட்டி நிறுவனமாகக் கருதப்படும் லெபாரா என்ற நிறுவனத்தின் இலங்கை அரச சார்பு செய்ற்பாடுகள் குறித்த செய்திகள் புலம் பெயர் இணையங்களில் வெளியாகியுள்ளன. இச் செய்திகள் எதுவும் ஆதாரபூர்வமாக நிறுவப்படவில்லை எனினும் 10 யூரோவிற்கு அவர்களின் கைத்தொலைபேசியை மீள் நிரப்பிக்கொண்டால் அதில் ஒரு யூரோவை தமிழ் அகதிகளுக்கு வழங்குவதாக அந்த நிறுவனம் விளம்ப்ரம் செய்வது அதிர்ச்சியான தகவல். ஒரு விஸ்கிப் போத்தல் வாங்கினால் சிகரட் இலவசம் என்பது போன்று தமிழ் மக்களின் அவலத்தை ஆதராமாக முன்வைத்து விளம்பரம் செய்யப்படுவது அருவருப்பானது.

பில்லியன் யூரோக்களில் வியாபாரம் நடத்தும் இந்த நிறுவனங்கள், தமது வியாபாரத்தில் மேலதிக வருமானம் கிடைத்தால் அதனை எலும்புத் துண்டுகளாக அகதிகளுக்கு வழங்குவோம் என்று கூறுவது அகதிகளை மட்டுமல்ல அவர்களுக்கு உதவிசெய்ய எண்ணுபவர்களையும் அவமானப்படுத்துவதாகும்.

தமிழ் நாட்டில் சினிமா வியாபாரிகளும், அரசியல் வாதிகளும், புலம் பெயர் நாடுகளில் புலிகளின் பெயரால் நடத்தப்படும் வியாபாரமும் இந்த வகையைச் சார்ந்ததே. இவ்வகையான விளம்பரங்களைச் செய்வதற்காகவே புலிகள் என்ற அடையாளத்தைப் பலர் பேணிக்கொள்ள முற்படுகின்றனர். ஒரு புறத்தில் பேரினவாதப் பேய்களாலும் மறுபுறத்தில் வியாபார வெறியர்களாலும் அழிக்கப்படும் தமிழ்ப் பேசும் தேசிய இனம் புரட்சிகர அரசியல் தலைமையை உருவாக்கும் வரையில் அப்பாவி மக்களின் அவலங்களில் பிழைப்பு நடத்தும் சமூகவிரோதிகளை நிறுத்த முடியாது.

Exit mobile version