ஒரு பேப்பர் மீதான தாக்குதல் குறித்த அதன் ஆசிரியர் குழுவின் அறிக்கை:
ஒரு பேப்பர் – 207 : பிரதிகள் அபகரிப்பு!
வணக்கம்!
ஒரு பேப்பரின் 207 வது இதழ் வார இறுதியில் வெளியானது. அதன் பிரதிகள் பெருமளவில் விநியோகிக்கப்பட்ட நிலையில் இன்று கிழக்கு, மற்றும் தென் கிழக்கு லண்டன் பகுதிகளில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த பத்திரிகையின் பிரதிகளை குறித்த ஒரு நிறுவனத்தின் வாகனத்தில் வந்த இரண்டு பேர் தொகையாக எடுத்துச் சென்றதாக எங்களிடம் முறையிடப்பட்டுள்ளது.
இவ்வாரம் வெளியான ‘ஒரு பேப்பர்’ இல் கீழக்காணும் தலைப்பிலான கட்டுரையை பிரசுரித்திருந்தோம்.
‘மலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்’
இக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டமைக்கும் பத்திரிகையை மக்கள் பார்வையிடாமல் தடுக்கும் செயலுக்கும் தொடர்புள்ளதாக நாம் உறுதியாக நம்புகிறோம்.
கருத்துச் சுதந்திரத்தினை அச்சுறுத்தும் இச்செயலை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன், இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோம்.
-ஒரு பேப்பர் ஆசிரியர் குழு
முரளீதரன், லைக்கா, கமரன், ராஜபக்ச : நண்பர்களின் நாடகம்
இனக்கொலையாளிகளுடன் லைக்கா குழுமம் : ‘தமிழ்த் தேசியவாதிகள்’ தலைமறைவு