Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஒரு நாட்டின் கண்ணியத் துக்கு விலை கிடையாது என் பதை அமெரிக்கா புரிந்து கொள்ள மறுக்கிறது!:பிடல் காஸ்ட்ரோ .

20.09.2008.

ஹவானா:
இரண்டு புயல்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட கியூபா, அமெரிக்காவின் உதவியை கண்ணியம் கருதி மறுத்து விட்டதாக பிடல் காஸ்ட்ரோ புதனன்று வெளியான ஒரு கட்டுரை யில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 46 ஆண்டுகளாக யு.எஸ். அமல் நடத்தி வரும் பொருளாதாரத் தடையால் கியூபா பல நூறு கோடி டாலர்களை இழந்துள்ளது. ஒரு நாட்டின் கண்ணியத் துக்கு விலை கிடையாது என் பதை அமெரிக்கா புரிந்து கொள்ள மறுக்கிறது என்று அவர் கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஐக், கஸ்டவ் புயல்கள் அடுத்தடுத்து கியூபாவைத் தாக்கின. இதனால் கியூபா வுக்கு சுமார் 500 கோடி டாலர்கள் மதிப்புள்ள சேதம் ஏற்பட்டது. கியூபா வுக்கு நிவாரண நிதியாக 50 லட்சம் டாலர்களை அளிக்க அமெரிக்கா முன் வந்தது. ஆனால் கியூபா அதை ஏற்க மறுத்து விட்டது. 50 லட்சத் திற்கு பதிலாக நூறு கோடி டாலர்கள் என்றாலும் கூட பதில் ஒன்றாகவே இருக்கும் என்று காஸ்ட்ரோ பெரு மையுடன் எழுதியுள்ளார்.

புஷ் பிடிவாதம்

அமெரிக்க ஏகாதிபத் தியத்தின் பொருளாதாரத் தடையால் சுமார் 20 ஆயிரம் கோடி டாலர்கள் இழப்பும் நூற்றுக்கணக் கான உயிரிழப்பும் சொல் லொண்ணா வேதனை களும் ஏற்பட்டுள்ளன. அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு விலை கொடுத்து மாளாது என்றும் அவர் தெரிவித் துள்ளார்.

முதலில் நிவாரணப் பணிகளுக்கு ஒரு லட்சம் டாலர்கள் அளிக்க முன் வந்த அமெரிக்கா, சேத மதிப்பீடு செய்ய அனுமதி கேட்டது. பின்னர் உத வியை 50 லட்சம் உயர்த்திய போது, சேத மதிப்பீட்டை விலக்கிக் கொண்டது. நிவாரண நிதிக்குப் பதிலாக தேவையானவற்றை வாங்கு வதற்கு வசதியாக பொரு ளாதாரத் தடையை தற் காலிகமாக விலக்கிக் கொள் ளுமாறு கியூபா கேட்டது. ஆனால் புஷ் நிர்வாகம் அக்கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது.

ரஷ்யா, வெனிசுலா, பிரேசில், ஸ்பெயின், ஈகு வேடர் ஹோண்டுரஸ் மற் றும் கொலம்பியா நாடுகள் நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளன. ஐ.நா. அளித்துள்ள 35 லட்சம் டாலர்கள் உதவியை கியூபா ஏற்றுக் கொண்டது.

வளம் மிக்க, வளமற்ற சிறிய, பெரிய நாடுகள் கியூ பாவுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அளிக்கும் உதவிகள் அனைத்தும் கியூபா கண்ணி யத்தை இழந்தால் காணா மல் போய் விடும் என்று காஸ்ட்ரோ தம் கட்டுரை யில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version