பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவுக்கு சொந்தமான நிலக்கரி வயல்களை தரகு முதலாளிகளுக்குத் தாரை வார்த்தது மட்டுமின்றி, அனில் அம்பானி, டாடா போன்றோரின் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான நிலக்கரியை மானிய விலையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சப்ளை செய்யவேண்டும்; அவர்களது தேவையில் 80% சப்ளை செய்யத் தவறினால் அபராதமும் கட்டவேண்டும் என்று கோல் இந்தியாவுக்கு குடியரசுத் தலைவர் மூலம் ஆணை பிறப்பித்திருக்கிறார் மன்மோகன். பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவின் பங்குகளில் 10% தனியார்மயக் கொள்கையை ஒட்டி விற்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 1% பங்குகளை வாங்கியிருக்கும் லண்டனைச் சேர்ந்த டி.சி.ஐ. எனும் நிதி நிறுவனம் மன்மோகனின் ஆணையை எதிர்த்துள்ளது. “ஏழைகளுக்கு மலிவு விலை மின்சாரம் தருவதற்காகத்தான் இந்த ஆணை என்று அரசு கூறியிருப்பது பொய். இது கோல் இந்தியாவிடமிருந்து பிடுங்கி, தனியார் முதலாளிகளுக்குத் தரப்படும் 1,10,000 கோடி ரூபாய் மானியம். இதில் இலஞ்சம் விளையாடியிருக்கிறது. இந்திய நீதிமன்றத்தில் இதற்கு நீதி கிடைக்காது. சர்வதேச மன்றத்தில் சட்டப்படி சந்திப்போம்” என்று கூறியிருக்கிறார், டி.சி.ஐ. நிறுவனத்தின் இயக்குநர் வெல்துசென்