Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஒரு சில நாட்களுக்குள்ளாகவே மில்லியன் பார்வையாளக்கவர்ந்த கிறிஸ்மஸ் பாடல்

santaஅமெரிக்கா தனது சொந்த மக்களையே 24 மணி நேரமும் கண்காணிப்பிற்குள் உட்படுத்தி இரும்புத் திரைக்குள் வைத்திருக்கின்றது என்ற உண்மையை எட்வார்ட் ஸ்னோடென் ஆதாரபூர்வமாக வெளியிட்ட தகவல்களின் பின்னர் மக்கள் விழித்துக்கொள்ள உணர ஆரம்பித்தனர். ஏகாதிபத்திய நாடுகளில் காணப்படும் திறந்தெவெளிச் சிறைகளுக்குள் மக்களுக்கு அரசுகளால் தீர்மானிக்கப்படும் சுதந்திரம் மட்டுமே வழங்கப்படுகிறது. உரிமைகளைக் கோருவோரும், ஜனநாயகத்தை விரும்புவோரும் இரும்புத்திரைக்குள் இல்லாமல் ஆக்கப்படுவதற்கான அத்தனை கருவிகளையும் அரசுகள் ஏற்படுத்திவைத்திருகின்றன. மறுபக்கத்தில் ஏகாதிபத்தியப் பொருளாதாரங்கள் தம்மை அழிப்பதற்கான கருவிகளைத் தாமே உருவாக்கிக் கொள்கின்றனர். மக்களை அழிக்கப் பயன்பட்ட தகவல் தொழில் நுட்பத்தைக்கண்டு முதலாளித்துவத்தின் கர்த்தாக்கள் இன்று அஞ்சுகின்றனர்,

அமரிக்க தேசிய பாதுகாப்பு முகவர் (NSA) கிரிஸ்மஸ் தாத்தா -Santa Claus-போல வேடமிட்டு மக்களைக் கண்காணிப்பதான காணொளி ஒன்று மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. சமூக வலைத்தளங்களையும் இணையங்களையும் ஆக்கிரமித்துக்கொண்ட பாடல் ‘The NSA is Coming to Town’ இதோ:

பாடல் வெளியிடப்பட்ட ஓரிரு நாட்களுக்கு உள்ளாகவே இவ்வளவு தொகையான மக்களைக் கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே போன்ற இலங்கைப் பொப் இசைப் பாடலான சுராங்கனியின் மெட்டோடு வெளியான அமெரிக்கா, அமெரிக்கா என்ற தமிழ்ப் பாடல் பலரது கவனத்தையும் கவர்ந்தது. இப்பாடலில் பின்லாடன் எதிரியாக இருப்பதற்கு பணம் கொடுக்கப்பட்டவர் என்ற ஆங்கில வாக்கியம் இன்று இலங்கை அரசியலில் பலருக்கும் பொருந்தும் இதோ அந்தப்பட்டல்:

Exit mobile version