Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஒரு சிங்களவன் கூட உயிரோடு செல்ல முடியாது- சீமான்.

இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விசாரிக்க .நா. நியமித்துள்ள குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளைக் கண்டித்தும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதைக் கண்டித்தும் இன்று நாம் தமிழர் அமைப்பு சார்பி், சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நிகழ்ச்சியில், சீமான் ஆவேசமாக பேசினார். அவர் பேசுகையில், .நா. குழு இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தை நி்ரூபிக்கும். அப்படி நிரூபித்து விட்டால் தமிழ் ஈழம் தானே அமைந்துவிடும். எனவே தமிழக தலைவர்களுக்கு நாம் தமிழர் சார்பில் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.உதவி செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை. உபத்திரவம் செய்யாதீர்கள். உதவி செய்கிறேன் என்று ஏதேனும் பேசி காரியத்தை கெடுத்து விடாதீர்கள்.இது வரை 500 மீனவர்கள் சிங்கவர்களால் பலியாகியுள்ளனர். ஆனால் இப்போது ஒருவர் பலியானதற்கு மட்டும் கலைஞர் அக்கறை செலுத்துவது ஏன்? பிரதமருக்கு கடிதம் எழுதுவது ஏன்? இவரின் குடும்பத்திற்கு மட்டும் 3 லட்சம் நிவாரணத் தொகை அறிவிப்பது ஏன்? எல்லாம் தேர்தல் நெருங்கி விட்டது என்பதற்காகத்தான்.தமிழகத்தில் சிங்களவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி கணக்கெடுத்து வைத்திருக்கிறது. இனி ஒரு முறை தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்களவர்களை உயிருடன் விடமாட்டோம். அவர்கள் யாருடன் உயிருடன் இலங்கை திரும்ப முடியாது என்று எச்சரிக்கிறேன் என்றார் ஆவேசமாக.முன்னதாக நேற்று ரஷ்யத் தூரதகத்திற்கு சீமான் தலைமையில் நாம் தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள் சென்றனர். இக்குழுவில், பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.பின்னர் தூதரக அதிகாரிகளைச் சந்தித்து அவர்கள் மனு அளித்தனர். அதில், இலங்கை தீவில் பூர்வீக குடிமக்களான தமிழர்கள் [^] நடத்துகிறார். விசாரணைக்கு மறுப்பதில் இருந்தே போர் குற்றம் நிகழ்ந்தது நிரூபணம் ஆகிறது. இந்த விஷயத்தில் .நா. பின்வாங்கக் கூடாது. இலங்கை அரசு மீது நடவடிக்கை அணியும் இலங்கைக்கு விளையாட செல்லக் கூடாது. இலங்கை அணியும் இந்தியாவுக்கு விளையாட வந்தால் நாங்கள் எதிர்ப்போம் என்றார் சீமான்.

Exit mobile version