இலங்கையின் வரலாற்றில் காலனியத்திற்குப் பிந்தயை காலத்திலிருந்து எண்பதுகளின் இறுதிவரைக்குமான காலப்பகுதிவரைக்கும் தொடர்ச்சியான அரசியல் நிகழ்வுகளை மார்சியப் பார்வையோடு முன்வைக்கும் இந்த நூல் ஒரு வராற்று ஆவணம். இலங்கையில் தேசிய இன முரண்பாடு தோற்றம் பெறுகின்ற காலகட்டம் அதன் வளர்ச்சி, அது கூர்மையடையும் காலம் வரை மிகத் தெளிவான அரசியல் சாட்சியாக முன்வைக்கப்படுகிறது.
இன்று மக்கள், போராட்டத்திற்குத் தயாரற்ற நிலையில் உலகம் முழுவதும் தன்னெழுச்சியான போராட்டங்கள் ஏகபோகங்களால் தூண்டப்பட்டு அவர்களால் பயன்படுத்தப்படுகின்றன. அரபு நாடுகளில் ஜனநாயகப் போராட்டங்கள் ஏகாதிபத்தியங்களின் கைகளிலும், இலங்கை போன்ற நாடுகளில் தேசிய விடுதலைப் போராட்டங்கள் சீமான் வை.கோ போன்றவர்களின் ஊடாக இந்திய மேலாதிக்க அரசின் போராட்டமாகவும் மாற்றமடைந்துள்ளது. இவற்றிற்கான கூறுகளை சண்முகதாசன் நீண்டகாலத்தின் முன்னரே அடையாளம் கண்டுள்ளமை நூலுன் ஊடாக வெளிப்படுகிறது.