Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஒரு இனம் நிலைத்து நிற்கவேண்டுமாயின் அதற்கான கலை பண்பாடு அவசியம்:சுஜித்ஜீ

sujithgஒரு இனம் தனித்து நிலைத்து நிற்கவேண்டுமாயின் அதற்கான கலை பண்பாடு அவசியம். அது இன்று ஈழத் தமிழனின் கலை கோடம்பாக்கத்தில் சிக்கிக்கிடக்கிறது.’ ஈழத் தமிழர்களுக்கான புரட்சிகரக் கலை அடையாளம் தொடர்பாக பறை- சுதந்திரத்தின் குரல் என்ற பெயரில் இளைஞர்கள் புலம்பெயர் நாடுகள் செயற்படுவது அண்மையில் ஜீ.ரி.வி – லைக்கா நடத்திய போராட்டத்திலும் பின்னதாக சந்தோஸ் வெளியிட்ட காணொளியிலும் போர்க்குரலாக ஒலித்தது.

நுகர்வுக் கலாச்சாரத்துள் மூழ்கடிக்கப்பட்டுள்ள கலை இன்று பல்தேசிய நிறுவனங்களால் உள்வாங்கப்பட்டுள்ளது. இது குறித்த விழிப்புணர்வு புலம்பெயர் இளைஞர்கள் மத்தியில் ஏற்பாட்டுவருவதற்கு சுஜித்ஜீ இன் கவிதா நிகழ்வு சிறந்த உதாரணம்.

கலை கலாச்சார அடையாளங்கள் அழிக்கப்பட்டு வரும் இன்றைய சிக்கலான சூழலில் கலைக்கான அடையாளம் வெறும் கருத்தாகவன்றி போராட்டமாக முகிழ்த்துள்ளது சமூக உணர்வுள்ளவர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்துள்ளது.

சுஜித்ஜீ இன் பெறுமதிமிக்க கவிதைக் குரல் கீழே:

தொடர்புடையவை:

போராட்டம் தொடரும்: சந்தோஸ்

Exit mobile version