பின்னர், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது. அதிலும், மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். பிறகு நரேந்திர மோடி, அத்வானி, ராஜ்நாத்சிங் ஆகியோர் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்கிறார்கள். அப்போது, தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதை தெரிவித்து, தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு நரேந்திர மோடி கேட்டுக்கொள்கிறார்.
இந்திய அரசியல் வரலாற்றில் தொழில்முறைக் கொலையாளி, போர்க்குற்றவாளி, இனக்கொலையாளி என்ற பல்வேறு கிரிமினல் முகங்களைக்கொண்ட ஒருவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்தடவை.
நரேந்திர மோடி புதிய பிரதமராக பதவி ஏற்கும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும், இந்த வாரமே அவர் பதவி ஏற்றுக்கொள்வார் என்று தெரிகிறது.
தனது அமைச்சரவையில் யார், யாருக்கு அமைச்சர் பதவி அளிப்பது என்பது குறித்து நரேந்திர மோடி நேற்று இரண்டாவது நாளாக ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில், பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங், மூத்த தலைவர்கள் அருண் ஜெட்லி, நிதின் கட்காரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.