கொழும்பிலுள்ள ஊடகங்கள் மரண வீடுகளில் எழுப்பும் ஒப்பாரிகள் புலிகளுக்குச் சார்பானவையாகவே உள்ளன என்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்டியில் கடந்த வியாழனன்று இடம் பெற்ற கூட்டுறவு வைபவத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்து வரும் இவ்வேளையில் அரசாங்கம் நாட்டில் அபிவிருத்தியையும் முன்னெடுத்து வருகின்றது. இந்த அபிவிருத்தி முயற்சிகளைப் பற்றி அரச ஊடகங்களும் சரி தனியார் ஊடகங்களும் சரி பேசுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கம் 65ஆயிரம் கோடி ரூபாவைச் செலவிட்டுள்ளது. இதுவரை காலம் கொழும்பில் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வந்த அபிவிருத்தி தற்போது கிராமப்புறங்களிலும் இந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.