Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஒபாமா பதவியேற்கும் முன்பே அவருடன் ஆலோசனைகளைத் துவக்கிவி்ட்டது சிஐஏ!

07.11.2008.

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள பராக் ஒபாமா பதவியேற்கும முன்பே அவருடன் ஆலோசனைகளைத் துவக்கிவி்ட்டது அந் நாட்டின் உளவு அமைப்பான சிஐஏ.

ஒபாமா வென்றதையடு்த்து நிருபர்களை சந்தித்த அதிபர் புஷ், ஒபாமாவுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அவர் பதவியேற்கும் வரை முக்கிய விவகாரங்களில் அவருடன் ஆலோசனை நடத்தியே முடிவெடுப்பேன் என்றார்.

அதே நேரத்தில் அவர் பதவியேற்கும் வரை நான் தான் முப்படைகளின் தலைவர் என்றும் கூறிவிட்டுப் போனார். தான் இருக்கும்வரை ராணுவ விஷயங்களில் ஒபாமா தலையிட முடியாது என்பதையே புஷ் அவ்வாறு சொன்னதாகக் கருதப்படுகிறது.

புஷ் இப்படிச் சொன்னாலும் அதிகாரவர்க்கத்தில் உடனடி மாற்றம் வந்துவிட்டது. சிஐஏ இயக்குனர் மைக் ஹேடன் தனது முக்கிய அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

ஜனவரி 20ம் தேதி பிற்பகல் வரை (ஒபாமா பதவியேற்கும் நாள்) நாம் இருவருடனும் (புஷ், ஒபாமா) இணைந்து பணியாற்றியாக வேண்டும். இப்போதைய அரசுடன் நாம் பணியாற்றும் அதே நேரத்தில் அதிபராகவுள்ள ஒபாமா மற்றும் அவர் சொல்லும் பாதுகாப்பு குழுவுடன் நாம் ஆலோசித்தே முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

முதல் கட்டமாக சிஐஏவின் தேசிய உளவுப் பிரிவின் இயக்குனரான (director of national intelligence) மைக் மெக்கொன்னல் தனது குழுவுடன் சென்று ஒபாமாவுக்கு சிஐஏவின் பணிகள், நடவடிக்கைகள், இப்போதைய சர்வதேச பாதுகாப்பு நிலவரம் குறித்த விளக்கம் அளிக்கவுள்ளார்.

இந்தப் பணியில் மெக்கொன்னலுக்கு சிஐஏவின் உளவு் பிரிவின் இயக்குனர் (CIA’s director for intelligence) மைக்கேல் மோரெல் உதவுவார்.

இந்த இருவர் தவிர மேலும் 4 சிஐஏ அதிகாரிகளும் ஒபாமாவுடன், அவர் பதவியேற்கும் முன்பே 24 மணி நேரமும் பணியில் இருப்பர்.

ஒபாமா பதவியேற்றவுடன் சிஐஏவில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

புஷ்சிடம் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கோலின் பாவெலுக்கு முக்கிய பதவி தரப்படலாம் என்று கூறப்படுகிறது. இவரும் கருப்பர் இனத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ஆலோசனைப்படியே சிஐஏவி்ல் மாற்றங்கள் வரலாம் என்கின்றனர்.

மேலும் இராக்கில் படைகளைக் குறைக்க ஒபாமா உத்தரவிடலாம் என்றும் தெரிகிறது. இப்போது அங்கு 1.5 லட்சம் அமெரிக்கப் படைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version