மோடியின் ஆட்சி! நாட்டிற்கே பேரழிவு!
ஜனவரி 26-ல் ஒபாமா வருகையைக் கண்டித்து பாண்டிச்சேரியில் ஆர்ப்பாட்டம்.
மோடியின் இந்த கார்ப்பரேட் பாசிசத்தையும், காவிப் பாசிசத்தையும் எதிர்க்க வக்கற்றவர்களாக அனைத்து ஓட்டுக் கட்சிகளும் மாறிவிட்டனர். ஏனெனில், எல்லாக் கட்சிகளுக்கும் இது தான் கொள்கையாக உள்ளது. இந்தக் கார்ப்பரேட் பயங்கரவாதத்திலிருந்தும், காவி பயங்கரவாததிலிருந்தும் நாட்டை விடுவிக்க வேண்டுமெனில், புரட்சிகர அமைப்புகளில் அணிதிரண்டு புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!
என்று தங்களது கண்டனவுரையை தோழர்கள் பதிவு செய்தனர். இந்த ஆர்ப்பாட்டம் நடந்த போது ஆங்காங்கே நின்றிருந்த மக்களின் கருத்துக்கள்:
எதுக்கு அவனை (ஒபாமாவை) அழைக்கணும்? அவன் நமது ராணுவ ரகசியத்த தெரிஞ்சுக்க வர்றான்.
மோடி நல்லவன்னு நெனச்சு ஓட்டுப் போட்டது. ஏன் இப்படி நாட்டையே விக்கிறான்? கம்யூனிஸ்டுகள் போராட்டம் நடத்துவது நல்லது தான்.
இங்க பேசுறது ஒபாமாவுக்கு கேக்கவா போகுது? இருந்தாலும் கம்யூனிஸ்டு நல்லாப் பண்றாங்க. நல்லாப் பேசுறாங்க.
கம்யூனிஸ்டு அடிக்கடி கூட்டம் போடுவாங்க. இப்போ கொஞ்சம் அதிகமாத் தான் இருக்காங்க.
ஒபாமா வந்தத எதிர்த்துப் பேசுறாங்க. ஒபாமா வர்றது இவங்களுக்குப் தப்பா தெரியுது. வரவைக்கிறவங்களுக்கு சரியா தெரியுது.
நம் நாட்டுல காரே இல்லாத மாதிரி, வெளிநாட்டுக் காரனுக்கு இவ்வளவு பாதுகாப்பு ஏன்? இவங்க நல்லாப் பேசுறாங்க. ஒபாமாவ எதிர்க்குறாங்க.
வெளிநாட்டுக் காரனுக்கு இவ்வளவு பாதுகாப்பு தர்றாங்க. நம்ம நாட்டு மக்கள் சாவுறாங்க. கவனிக்க மாட்றாங்க. இவனுங்கள சுடணுங்க.
நம்ம குடியரசு தினத்துக்கு இவன அழைச்சி நடத்தக் கூடாது. அவன் சீனாவ கிளப்பி விடுகிறான். நமக்கு எதிரியே அவன் தான்.
இவங்க நல்லாப் பேசுறாங்க. ஆனா, மோடி, ஒபாமாவ ஒருமையில் பேசுறது பிடிக்கல. மக்களால தேர்ந்தெடுக்கப்பட்டவங்கள இப்படிப் பேசக் கூடாது.
சரியாத் தான் பேசுறாங்க. மக்கள் காது கொடுத்துக் கேட்டத்தாங்க. அவங்கவங்க வேலையப் பாக்குறாங்க. இங்க பேசுறதால, அவனுக்கு (ஒபாமாவுக்கு) என்னங்க. நல்ல பாதுகாப்பாத்தான் போறான்.
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி. தொடர்புக்கு: 95977 89801.