Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஒன்று பட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு- டி.கே.ரங்கராஜன் கொழும்பில் பேச்சு.

கொழும்பு நகரில் இலங்கை கம்யூ னிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாடு ஆகஸ்ட் 27 வெள்ளியன்று துவங்கியது. மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.கே.ரங்க ராஜன் பங்கேற்றுள்ளார். மாநாட்டில் உரையாற்றிய அவர், இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சனை குறித்து பேசியது வருமாறு:-இலங்கை நிகழ்வுகளை, குறிப் பாக நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத் தன்மை தொடர்பான நிகழ்வுகளை, தொடர்ந்து கவனித்து வருகிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சனையில் விரைந்து எடுக்க வேண்டிய அரசியல் தீர்வுக்கான தேவை உள்ளது என்பதை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்றுக் கொள்கிறது. ஒன்றுபட்ட இலங்கை அமைப்புக் குள்ளேயே தமிழ் பேசும் பகுதிகளுக்கு அதிகார மாற்றங்களோடு தன்னாட்சி உரிமையினையும் வழங்குவதை உள்ள டக்கியதாக அது இருக்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். அத்தகைய தீர்வு இலங்கையின் ஒற்றுமையினை யும், ஒருமைப்பாட்டினையும் வலுப்ப டுத்தும் என நாங்கள் உணர்கிறோம். அப்படியொரு தீர்வுக்கு பாடுபடும் போதே உடனடியாக மூன்று பிரதான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண் டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவா ரணம் வழங்குதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியேற்றத்திற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது எங்கள் கருத்து. இலங்கைத் தமிழ் குடிமக்களையும், விடுதலைப் புலிகளையும் (எல்டிடிஇ) மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றாகப் பார்ப்பதில்லை, வேறுபடுத்தித்தான் பார்க்கிறது. தமிழ் மக்களின் நியாய மான தேவைகளையும், உணர்வு களையும் புரிந்து கொள்ளும் அதே நேரத்தில் விடுதலைப்புலிகளின் அதி தீவிர நடவடிக்கைகளுக்கு எங்களின் எதிர்ப்பினை காட்டியிருக்கிறோம். நீண்ட யுத்தம் முடிவுக்கு வந்திருக்கும் இந்த வேளையில் யுத்தத்தினால் இடம் பெயர்ந்து நிவாரண முகாம்களில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் மறுகுடியேற்றம் பற்றி பிரதானமாக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

Exit mobile version