Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஒசாமா பின்லேடனின் புதல்வி சவூதித் தூதரகத்தில் தஞ்சம்!

“அல்குவைதா தலைவர் ஒசாமா பின்லேடனின் புதல்வி எமான் பின்லேடன் ஈரானின் தலைநகரான தெஹ்ரானிலுள்ள சவூதி தூதரகத்திலேயே தஞ்சமடைந்துள்ளார்” என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மனெளச்சர் மொட்டாக்கி தெரிவித்துள்ளார்.

“எமான் பின்லேடன் இங்குதான் தங்கியுள்ளார் என்பதை சவூதி அரேபிய இராஜதந்திரிகளும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்கள். அவர் எவ்வாறு அத்தூதரகத்துக்குள் சென்றார் என்பது புரியாத புதிராக உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பின்லேடனின் புதல்வி எமான் பின்லேடன் முறையான பயண ஆவணங்களைப் பெற்றுக்கொண்டால், ஈரானை விட்டு வெளியேற முடியும். இதில் எத்தகைய சிக்கலும் கிடையாது” என்றும் மொட்டாக்கி விளக்கியுள்ளார்.

அமெரிக்க இரட்டைக் கோபுரம் 2001 ஆம் வருட செப்ரெம்பர் 11 ஆம் திகதி அல் குவைதா தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது. அச்சமயம் பின்லேடன் ஆப்கானில் தங்கியிருந்தார். அமெரிக்காவின் கோரிக்கைக்கிணங்க அவரை அப்போதைய தலிபான் ஆட்சியினர் அதனிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, அமெரிக்கா ஆப்கான் மீது படையெடுத்து தலிபான் ஆட்சியைக் கவிழ்த்தது. அச்சமயம் அங்கிருந்த பின் லேடனின் மனைவியரில் ஒருவரும், பிள்ளைகளும் ஆப்கானைவிட்டு வெளியேறி விட்டனர்.

Exit mobile version