இது குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையகத்துடன் பேச்சுக்கள் நடத்துவதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட ஆலோசகர் ஜெயந்த தனபால ஜெனீவாவிற்குப் பயணமானார்.
ஐ.நா மற்றும் அமெரிக்க சார்பு புதிய இலங்கை அரசு ஆகியவற்றின் நாடகமாகவே இது கருதப்படுகிறது. ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழுவின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளைத் தற்காலிகமாக நிறுதி வைப்பதற்கும் அதனை இலங்கையின் உள்ளக விசாரணையாக மாற்றுவதற்கும் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
அவ்வாறு ஒரு சூழல் தோன்றுமானால் புலம்பெயர் நாடுகளிலிருந்து ராஜபக்சவைத் தூக்கில் போடுவதாக மட்டுமே அரசியல் நடத்தும் பிழைப்புவாதிகளின் வியாபாரம் முடிவிற்கு வரலாம்.