இலங்கையில் நடந்த போரில் போர்க் குற்றமும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் இழைக்கப்பட்டுள்ள என்று ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ள நிலையில், இக்குற்றச்சாற்றுகளின் மீது இந்திய அரசு வெளிப்படையான நிலையெடுக்க வேண்டும் என்ற மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது.
ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் பிடிஐ செய்தியாளரிடம் பேசிய மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசிய இயக்குனர் மீனாட்சி கங்கூலி இவ்வாறு கூறியுள்ளார்.
“உலக அரங்கில் இந்தியா தலைமேற்க வேண்டும் என்று விரும்பினால் அது அரசை விட மக்களின் உரிமை மேம்பட்டது என்கிற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ள மீனாட்சி கங்கூலி, ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கையின் மீதும் அது தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.