இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள ஐ.நா.நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் இலங்கையில் நீண்டகாலம் நிலைத்திருக்கத் தக்க வகையிலான சமாதான சூழலைக் கட்டியெழுப்புவது தொடர்பாக, ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் இதற்கு முன் அளித்திருந்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்றும் மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய – பசிபிக் வலயப் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் சாம் ஷரீபி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இதனை வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா. நிபுணர் குழுவானது இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக தயாரித்துள்ள விசாரணை அறிக்கை குறித்து அறிந்து கொள்ளும் உரிமை ஒவ்வொரு இலங்கை மக்களுக்கும் உள்ளதால், அதனைப் பகிரங்கப்படுத்த ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கை மூலம் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்