ஐ.நா. சபை: எய்ட்ஸ், ஹெச்ஐவி வைரஸ் பரவுவதை தடுக்க ஐ.நா சபையால் ஏற்படுத்தப்பட்ட ஐ.நா எய்ட்ஸ் அமைப்புக்கு சர்வதேச நல்லெண்ணத் தூதராக நடிகை ஐஸ்வர்யா ராய் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 67வது பொது கூட்டத்தில் ஐ.நா எய்ட்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் மைக்கேல் சிடிபி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். குழந்தைகளுக்கு ஹெச்ஐவி தாக்குவதை தடுத்தல், நோய் ஏற்பட்டவர்களுக்கான மருத்துவமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்தான் ஐஸ்வர்யா ராயின் பணியாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.
1994 ஆம் ஆண்டு இந்தியாவில் உற்பத்தித் திறனற்ற மேல்தட்டு வியாபார சமூகத்தின் நுகர்வுத் திற்னைக் கண்டு இந்தியாவிற்கு படையெடுத்த பிரஞ்சு அழகு சாதன நிறுவனமான ஒரையால் ஐஷ்வரியாவை உலக அழகியாகத் தெரிவுசெய்தது. சில ஆண்டுகளுக்கு உள்ளாகவே வெளிநாட்டு அழகு சாதனப் பொருட்களின் விற்பனை பல மடங்கானது.
இப்போது அமரிக்காவின் அடியாளான ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஐஷ்வரியாவைத் தெரிவு செய்துள்ளது. இனிமேல் இந்தியாவிலும் தெற்காசியாவிலும் எயிட்ஸ் விற்பனை அதிகரிக்குமோ?