Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐ.நா இல் இலங்கைக்கு இறுதிநேர ஆதரவு வழங்கிய இந்தியா

ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பூகோள காலகிரம மீளாய்வுக் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நடந்துகொண்டது.
இலங்கை நிலைவரம் குறித்து ஆராய நியமிக்க ஐ.நாவால் நியமிக்கப்பட்டிருந்த குழுவில் ஸ்பெயின், பெனின் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் அங்கம்வகித்தது..
நேற்று இலங்கை தொடர்பில் நடைபெற்ற இறுதிக்கூட்டத்தில், இலங்கை தொடர்பில் ஏற்கனவே முன்வைத்த சிபாரிசுகளை நீக்கியிருந்த இந்தியா அதைப்பற்றி பொருட்படுத்தாமல் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டது,
இலங்கை குறித்த தெளிவான நிலைப்பாடு ஒன்றை முன்வைக்காமல் இந்தியா நடந்துகொள்வது குறித்து பிரான்ஸ் கவலைதெரிவித்தது.
நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இலங்கைக்கு ஆதரவளித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்ததுடன் சர்வதேச நாடுகள் இலங்கை தொடர்பில தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் சாதகமான பிரதிபலிப்பை இலங்கை அரசு அறிவிக்குமென்று குறிப்பிட்டார்.
‘மனித உரிமைகளை’ நிலைநாட்ட 99 நாடுகள் 210 பரிந்துரைகளை முன்வைத்தன. இதில் 110 பரிந்துரைகளை ஏற்பதாக இலங்கை அரசு அறிவித்திருக்கிறது.

Exit mobile version