இலங்கையில் வன்னிப் படுகொலைகள் முடிந்தததும் உலகம் முழுவதும் சிறிய அளவிலாவது ஜனநாயக முற்போக்கு சக்திகளின் எழுச்சி துளிர்விட ஆரம்பித்தது. இந்திய மாவோயிஸ்ட்டுக்கள், தமிழ் நாடு மக்கள் கலை இலக்கியக் கழகம், புலம் பெயர் அரசியல் சக்திகள், இலங்கை மக்கள் போன்ற பல அரசியல் இயக்கங்கள் வன்னிக் கொலைகளை ஏகதிபத்தியங்கள் அனைத்தும் இந்திய இலங்கை அரசுகளுடன் இணைந்தே நடத்தின என்பதை அம்பலப்படுத்த ஆரம்பித்தனர். இவற்றை எதிர்கொள்வதற்கும் தமக்கு வெளியிலிருந்து எதிர்ப்புக்கள் உருவாவதையும் தடுக்க இலங்கை அரசை அமரிக்காவே எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்டது. புலம் பெயர் சந்தர்ப்பவாதிகள் அமரிக்காவோடு ஒட்டிக்கொண்டார்கள். ஜெயலலிதா, சீமான், நெடுமாறன், வைகோ போன்றவர்கள் முடுக்கிவிடப்பட்டனர். மனித உரிமையைக் கையகப்படுத்திய அமரிக்காவும் இந்திய அரச உளவுப்படைகளும் மூன்று வருடங்கள் கடத்திவிட்டு பிரச்சனையின் கோரம் தணிந்ததும் இப்போது இலங்கை அரசைப் பாராட்டுகிறார்கள். இன்னும் சில வருடங்களில் ராஜபக்சவிற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசை அறிவித்தாலும் வியப்படைவதற்கில்லை.