அமெரிக்க சட்டத்தரணியாக ஸ்டீவன் ரட்னர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
ஸ்டீவன் ரட்னர், எழுதியுள்ள “மனித உரிமைகளும் சர்வதேச சட்டமும்” என்ற நூலில் இலங்கையில் தமிழர்கள், இனரீதியாக புறக்கணிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக கெஹலிய ரம்புக்வெல சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான ஒருவர் எவ்வாறு இந்தக் குழுவில் இடம்பெற முடியும் என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தநிலையில் இந்தக்குழுவுக்கு எதிராக, இலங்கை சர்வதேச ஆதரவை பெற முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ரஸ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள் பான் கீ மூனின் நிபுணர் குழு தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன.
அதேவேளை அமெரிக்கா, நோர்வே, பிரான்ஸ் போன்ற நாடுகள் ஐ.நா. நியமித்துள்ள ஆலோனனைக் குழு குறித்து தமது ஆதரவை தெரிவித்துள்ளன.