யுத்தத்தின் போது சிறுவர் போராளிகளை பயன்படுத்தியமை தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பன ஐக்கிய நாடுகள் சபையின் அவமானப் பட்டியிலில் சேர்க்கப்பட்டது. யுத்தம் நிறைவடைந்த நிலையில் விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்ததைத் தொடர்ந்து அப் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் நீக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி யுனிசெப்புடன் இணைந்து சிறுவர் போராளிகளை விடுவித்ததமையை அடுத்து அக்கட்சியும் இப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பின்னர், இலங்கையில் சிறுவர்கள் படையில் இணைத்து கொள்ளப்பட்டமை தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும், கிராமங்கள் கிரமமான முறையில் அபிவிருத்தி செய்யபட்டு வருவதாகவும், வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரின் தலையீடு தொடர்ந்து வருவதாகவும் ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.
594 சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்து சமூகத்தில் மீண்டும் இணைத்துள்ளதாக அரசு தெரிவித்திருந்தது.
இதன் அடிப்படையில் இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் அவமானப் பட்டியலில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. சிறப்பு பிரதிநிதி ராதிகா குமாரசாமி தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான சிறுவர்கள் சாட்சி எதுவுமின்றி பேரினவாத மகிந்த அரசின் சிறைக்குள் வைக்கப்படுள்ளனர். பலர் திட்டமிட்டுப் போதைப்பொருள் பாவனைகு அரசபடைகளால் அடிமையாக்கப்படுகின்றனர். குழந்தைகள் பாலியல் வதைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.