ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையானது ஐ.நா. அறிக்கையயான்றல்ல. அது ஐ.நா. செயலாளர் நாயகத்தின் தனிப்பட்ட முன் முயற்சியே என ரஷ்யா தெரிவித்துள்ளது.அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட இலங் கையின் நல்லிணக்க முயற்சிகளை ஐ.நா. சிக்க லாக்கிவிடக் கூடாது எனவும் ரஷ்யா கூறியுள்ளது.கொழும்பிலுள்ள ரஷ்ய தூதுவர் விளா டிமிர் பி மிகைலோவ் இது தொடர்பாகக் கூறுகையில்,
ஐ.நா. அறிக்கை ஒன்றைப் பற்றி நாம் பேசவில்லை. ஏனெனில் அது ஐ.நாவினாலோ அல்லது அதன் கோரிக்கையினாலோ தயா ரிக்கப்படவில்லை. அது ஐ.நா. செயலாளர் நாயகத்தின் தனிப்பட்ட முன்முயற்சியே என்றார். வரைவிலக்கணங்கள் மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது என்பதில் நாம் கவனமா கச் செயற்பட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக அந்த நிபுணர் குழு தனது இலக்கிற்கும் அப் பால் சென்றுள்ளதாகத் தென்படுகிறது.
இறுதியாக இலங்கை தனது நீண்டகால ஆயுத மோதல்களின் பின் காயங்களைக் குணப்படுத்திவரும் நிலையில் தேவைப்பட் டால் ஐ.நா. தனது உதவிகளை வழங்கலாம். நல்லி ணக்க முயற்சிகளை சிக்கலாக்கி விடக் கூடாது எனவும் அவர் தெரி வித்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் கோத் தபாய ராஜபக்சவுடன் நேற்று நடத் திய பேச்சுவார்த்தையின் பின்னரே ரஷ்ய தூதுவர் இவ்வாறு தெரிவித் துள்ளார்.