Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐ. நா அதிகாரிகளை விசாரிக்க கோரி டிசம்பர்16ஆம் தேதி ஒன்று கூடல் – மே பதினேழு இயக்கம்

UNதமிழினப் படுகொலையின் போது இலங்கை அரசுக்கு துணை செய்து கொலைகளத்தில் மறைமுக பங்கேற்ற ஐ. நா அதிகாரிகளையும், அதன் பின்னிருந்த இந்திய அரசின் செயல்பாட்டினையும் கண்டித்தும்.. ஐ. நா இலங்கைக்கு ஆதரவாக நின்று தமிழர்களுக்கு மறுத்த சர்வதேச சுதந்திர விசாரணை, ஐ. நாவின் பொது வாக்கெடுப்பினை நடத்தக் கோரியும்.. நடைபெறும் டிசம்பர் 16ம் தேதி மாலையில் நடக்கும் எதிர்ப்பு ஒன்று கூடலில் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

சர்வதேச்ச் சமூகமாய் விரிந்து நிற்கிற தமிழர்கள் ஐ. நாவின் உயர் அதிகாரிகள் தமிழினப்படுகொலையில் மெளனமாகவும், நேரடியாகவும் பங்கெடுத்த நிகழ்வுகளுக்கான நீதியை பெரும் வரை தமது போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். ஏனெனில் இந்த சர்வதேச அரங்கம் இலங்கை அரசுடன் கூட்டிணைந்து தமிழர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய “இலங்கை மீதான சர்வதேச விசாரணை” மற்றும் “ சுதந்திர தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு” என்கிற நிகழ்ச்சி நிரலை உடைத்து இருகிறார்கள். ஐ. நா நேர்மையற்று நடந்து கொண்டதை சர்வதேச மக்கள் சமூகத்திற்கு எடுத்துச் சொல்லவேண்டிய அவசியமும், வரலாற்று கடமையும் நமக்கு இருக்கிறது. இதன் மூலமே நமக்கு நிகழ்ந்த அநீதியின் முழு பரிமாணத்தினை உணர்த்த இயலும். இதுவே நமக்கு இதுகாரும் மறுக்கப்பட்டு வந்துள்ள சர்வதேச அங்கீகரம் மீளப்பெருவதற்கான வாதத்தினை தமிழ்ச் சமூகம் முன்வைக்க இயலும்.

இதன் துவக்கமாய் மே பதினேழு இயக்கம் 16 டிசம்பர்2012 அன்று ஐ. நா அதிகாரிகளுக்கு எதிரான போராட்டமாய் , அந்த அதிகாரிகளை விசாரிக்கவும், அவர்களால் மறுக்கப்பட்ட நீதியையும் திரும்பப் பெற வலியுறுத்தி மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்பட இருக்கிறது. இதில் தமிழர்கள் சாதி,மதம், கட்சி கடந்து இணைந்து நிற்பதன் மூலம் ஐ. நாவிற்கு ஒரு நெருக்கடியை அளிக்க முடியும். இது துவக்க நிகழ்வாய் அமையும் அதே நேரம் சர்வதேச தமிழ்ச் சமூகத்திற்கு மே பதினேழு இயக்கம் ஐ,. நாவிற்கு எதிரான போராட்ட்த்தினை உலகெங்கும் நடத்த வேண்டும் என கோரிக்கையை முன்வைக்கிறது. இதன் தொடர்ச்சியாக வருகின்ற முருகதாசன் நினைவு நாள் அன்று உலகெங்கும் உள்ள ஐ. நா அலுவலகங்கள் முற்றுகை இடப்படவேண்டும் என்கிற வேலை திட்டத்தினை சர்வதேச தமிழ்ச் சமூகத்திடம் முன்வைக்கிறோம். இதன் மூலம் உலகெங்கும் உள்ள மக்கள் இனப்படுகொலையில் ஐ. நாவின் பங்கேற்பினை அறிந்து கொள்வதும், ஐ. நா திட்டமிட்டு போர்குற்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்கிற பழியை தமிழர்கள் மீது சுமத்தியதை அம்பலப்படுத்த முடிவதுடன், ஐ.நா தடுத்து வைத்த இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை, தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு ஆகிய நீதிகளை பெற்றிட முடியும்.

சர்வதேசத்தின் அயோக்கியத்தனத்தினை உடைத்தெறிவதே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு என நாங்கள் மிக உறுதியாக நம்புகிறோம். இந்த சனநாயக போராட்டத்தில் கலந்து கொள்வதன் மூலம் தமிழகத் தமிழர்களாகிய நாம் தமிழீழ விடுதலை போராட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம்.

காலங்கள் எத்தனை கடந்தாலும் இந்த துரோகத்திற்கு பதில் கிடைக்காமல் விடமாட்டோம் என்ற உறுதி இருக்கிறது ! நமக்கு ஆதரவான சக்திகள் என எவரும்இல்லை. .வேறு ஒருவர் வந்து நமக்கான போராட்டத்தை நடத்தபோவதும் இல்லை. .ஐ.நா.வின் கொடூர முகத்தை தோலுரிப்பதே ஈழ விடுதலையின் அடுத்தகட்ட போராட்ட நகர்வு ! சாதி மிருகம் பிரிக்க நினைத்தாலும் இனத்தின் விடுதலையை விட்டுகொடுக்க தமிழர்கள் ஒரு போதும் தயாராக இல்லை என்பதை உலகிற்கு உணர்த்துவோம் ! 2009ல் மவுனித்தோம். இன்னுமா மவுனிப்போம்.?

மாவீரன்.முத்துகுமாரின் நெருப்பு நம்மை ஒன்றிணைக்கட்டும். நாம் வெல்வோம்.

அனைவரும் கூடுவோம். மக்கள் திரள் ஒன்று கூடல்: டிசம்பர் 16, ஞாயிறு மாலை 4 மணி, வள்ளுவர் கோட்டம்.

… — மே பதினேழு இயக்கம்

Exit mobile version