Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐ.நாவிற்கு எதிராக சிங்களப் பெருந்தேசியவாதப் போராட்டங்கள் : விமல் வீரவன்ச குழு முன்னணியில்

சரவதேச அரசியல் போட்டியில் இலங்கை குறித்து மெளனமாக இருந்த ஐக்கியநாடுகள் சபை இறுதியில் நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்திருப்பது அறியப்பட்டதே. இதற்கு எதிராக இலங்கை அரச அமைச்சர் விமல் வீரவன்ச குழுவினர் 1000 பேர் கொண்ட குழுவுடன் கொழும்ப்பு ஐக்கியநாடுகள் செயலகத்தைச் சுற்றிவளைத்துப் போராட்டம் நடத்தினர். இன்று மாலை அங்கு சென்ற பொலீசார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க போராட்டக் குழுவினர் அங்கிருந்து வெளியேறினர். அதே வேளை வீரவன்ச போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார்.
கொழும்பு திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்தின் முன்னால் சத்தியாக்கிரகத்தை மேற்கொண்ட விமல் விரவன்ச குழுவைச் சேர்ந்தோர் பொலீசாரின் வேண்டுகோளிற்கு இணங்க அங்கிருந்து வெளியேறினர்.

 

 

 

 

 

 

 

Exit mobile version