இரண்டு நாட்களுக்குள் ராஜபக்ச அரசு தேர்தல் முறைகேடுகள் குறித்து கேள்வி கேட்ட ஊடகவியலாளர் ஒருவரை வெளியேற்றியதுடன் பொன்சேகாவின் அலுவலகத்தையும் முற்றுகையிட்டுச் சோதனை செய்தது மட்டுமன்றி அவரைக் கைதுசெய்யப் போவதாக மிரட்டுகின்றது.
29ம் திகதி ஜனவரி மாதம் இன்னசிற்றி பிரஸ், ஐ.நா வின் பேச்சாளர் fவரன் ஹகிடம் இப்போதும் நிம்மதி அடைந்த நிலையிலேயேயா உள்ளார் என வினவிய போது அவர் ஆம் எனப் பதிலளித்தார்.
இவ்வறு வெளிப்படையாகவே மேற்கு நாடுகளின் செல்வாக்கிற்கு உட்பட்ட ஐ.நா மனித உரிமை மீறல்களையும், அரச பயங்கரவாதத்தையும் ஆதரிக்கும் வேளையில் ஐ.நா விற்கும் மேற்கிற்கும் தமது உணர்வுகளை வெளிப்படுத்தப் போவதாக இன்று “வட்டுக்கோட்டைத் தீர்மானம்” வாக்கெடுப்பு பிரித்தானிய தமிழர்கள் மத்தியில் நடைபெறுகிறது. வெளிப்படையான இந்தத் உண்மைகளின் மத்தியில் நிகழ்த்தப்படும் வாக்கெடுப்பு நாடகம் பின்னணி குறித்துப் பலர் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.