ஐரோப்பிய நாடுகளிலும் அமரிக்காவிலும் அவுஸ்திரேலியாவிலும் வேலையற்றோரின் தொகை நிறுத்தப்பட முடியாமல் அதிகரித்து வருகின்றது. பிரான்சில் தொழில் அமைச்சின் நேற்றய தகவல்களின் அடிப்படையில் ஐந்து மில்லியன் மக்கள் வேலையற்றோராகியுள்ளனர். தற்காலிக வேலை மற்றும் பகுதி நேர வேலை செய்வோரின் தொகை இங்கு இணைத்துக்கொள்ளப்படவில்லை.
ஏனைய நாடுகளை ஆக்கிரமிக்கும் ஐரோப்பிய நாடுகள் தமது எல்லைக்குள்ளேயே பெருந்தொகையான வேலையற்றோரை உருவாக்கியுள்ளன. இந்த நிலையில் கனவுகளோடு பெருந்தொகையான பணச் செலவில் மேற்கு நாடுகளுக்கு வந்திறங்கும் இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்களில் பலர் வறுமையின் கோரத்தை அனுபவிக்கின்றனர்.