Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐரோப்பிய நாடுகளில் இன்று மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மரணித்த போராளிகளின் நினைவாக இன்று ஐரோப்பிய நாடுகள் எங்கும் புலம் பெயர் தமிழர்கள் கலந்துகொண்ட மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது. பெருந்திராளன மக்கள் மரணித்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரண்டு சென்றனர். மாவீரர் தினம் பெரும் பணச் செலவில் வர்ணக் கோலங்கள் நிறைந்த கண்கொள்ளாக் காட்சிகளாக காட்சியளிதத்தாக கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். இரண்டு வேறுபட்ட போட்டிக் குழுக்களால் மாவீரர் தினம் வேறு வேறு இடங்களில் நடத்தப்பட்டது.
இவ்விரு குழுக்களும் பிரபாகரனைத் தவிர்ந்த ஏனைய அனைத்துப் போராளிகளுக்கும் அஞ்சலி செலுத்தினர். மக்களை யார் அதிகமாக இணைத்துக்கொள்வது என்ற போட்டியில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இலங்கையின் வடக்கே யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் படையினர் சென்று தேடுதல் நடத்தியதாக மாணவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

விடுதலைப்புலிகளின் மாவீரர் தினமாகிய செவ்வாய்கிழமையன்று அவர்களை நினைவுகூர்ந்து விளக்கேற்றப்படுவதைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆயுனும் பல்கலைக் கழக மாணவர்கள் போரின் இறந்தவர்கள் நினைவாக தீபம் ஏற்றி வழிபட்டதாக கூறியுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் சென்ற படையினர், மாணவர்களின் அறைகளை சல்லடை போட்டு தேடுதல் நடத்தியதாகவும், மாணவிகளின் விடுதிக்குள் சென்ற அவர்கள், அங்கு ஏற்றப்பட்டிருந்த விளக்குகளையும், அறைக் கதவுகளையும் அடித்து நொறுக்கியதாகவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்ஷானந்த் தெரிவித்தார்.

Exit mobile version