Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐரோப்பிய நாடுகளின் உற்பத்திப் பொருட்களுக்கு ரஷ்யாவில் தடை:பொருளாதார அதிர்வு ஆரம்பம்

vladmir-putinநேட்டோ நாடுகள் முன்னை நாள் சோசலிச நாடான ராஷ்யாவிற்கு எதிராக உக்ரையின் மையமாகக்கொண்டு யுத்தத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளன. அமெரிக்கா தலைமையிலான இந்த யுத்தம் பிரந்தியத்தில் போர்ப் பீதியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரையின் நிறவெறி நாசிக் கட்சிகளுக்குப் பின்புலத்தில் செயற்படும் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளுடன் இணைந்து கட்டவிழ்த்துவிட்டுள்ள ஆக்கிரமிப்பு யுத்ததின் மற்றொரு அத்தியாயம் உக்ரையினில் எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றது. சோவியத் ஒன்றியத்தின் உறுப்பு நாடாகவிருந்த உக்ரைனிற்கு பிரிந்து செல்வதற்கான சுயநிர்ணய உரிமை லெனின் காலப்பகுதியில் வழங்கப்பட்டிருந்தது. உக்ரையினின் பின் தங்கிய பொருளாதாரத்தை வளர்ப்பதற்காகச் சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன.

குருச்சேவ் அதிகாரத்தில் அமர்ந்த 1953 ஆம் ஆண்டிற்குப் பின்னான காலப்பகுதியிலிருந்து சோசலிச அமைப்பு அழிக்கப்பட்டு தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமைக்கும் குழிபறிக்கப்பட்டது. சோசலிச அமைப்பின் அழிவோடு தேசிய இனங்களின் ஒடுக்குமுறையும் ஆரம்பமானது. படிப்படியாக சோசலிச ஆட்சி மறைந்து சர்வாதிகாரிகளின் பிடியில் முதலாளித்துவம் மீட்சி பெற்றது. 90 களில் சோவியத் ஒன்றியம் முழுமையாக அழிக்கப்பட்டு உலகமயமான நவ-தாராளவாதப் பொருளாதாரம் ஆரம்பமானதும் அமெரிக்கா தனது முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்த முயன்றது.

90 களின் ஆரம்பத்தில் ஆரம்பித்து உக்ரேயின் நிற வெறி நாசிக் கட்சிகளுக்கு நிதியுதவி வழங்கிவந்த அமெரிக்க 2014 இல் சதிப் புரட்சியைத் தோற்றுவித்து தேர்தலால் தெரிந்தெடுக்கப்பட்ட கட்சியை அகற்றி நாசிகளை ஆட்சிக்குக் கொண்டுவந்தது. நாசிகளுக்கு எதிராக ரஷ்யர்கள் அதிகமாக வாழும் பகுதிகளும் உள்ளூர்த் தொழிற்சங்கங்களும் போராட ஆரம்பித்தன. இப் போராட்டத்தின் இடையே அமெரிக்க ஆதரவு நாசிகள் பயணிகள் விமானம் ஒன்றைச் சுட்டு விழுத்தினர்.

உக்ரையினில்ருந்து பிரிந்துசெல்லப் போராடும் போராளிகளுக்கு ரஷ்யா உதவுவதாகக் கூறி அமெரிக்க அரசு ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தது.

முதலில் உக்ரேயினுக்கான எரிவாயு வினியோகத்தைத் துண்டித்த ரஷ்ய அரசு இப்போது ஐரோப்பிய உணவு இறக்குமதிப் பொருட்களுக்குத் தடைவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் விவசாய உற்பத்திப் பொருட்களுக்குத் தடைவிதித்துள்ளது. ரஷ்யாவின் உட்பகுதியில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என்ற எச்சரிக்கையுடன் இத்தடை அமலுக்கு வந்துள்ளது.

12.2 பில்லியன் பெறுமதியுள்ள ஐரோப்பிய மற்றும் அமெரிக்க உற்பத்திப் பொருட்களையும் மூலப்பொருட்களையும் ரஷ்யா கொள்வனவு செய்கிறது.

தடைசெய்யப்படும் பொருட்களில் மக்ட்டொனால்ட் உற்பத்திப் பொருட்களும் அடங்கலாம் என ரஷ்ய அரசு கூறுகிறது.

ரஷ்யாவின் இத்தடையால் சில நாடுகளின் விவசாய உற்பத்தி நிறுவனங்களுக்கு மூடுவிழா நடக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

ஐரோப்பிய நாடுகளில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத் தடையின் அடுத்த கட்டமாக ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு வினியோகத்தை ரஷ்யா துண்டிக்குமானால் ஐரோப்பிய நாடுகள் திவாலாகும் நிலை உருவாகலாம்.

Exit mobile version