ஐரோப்பாவில் நவதாராளவாத முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு பொருளாதார நெருக்கடியை உருவாக்கிய பின்னர் ஐரோப்பா எங்கும் உழைக்கும் மக்களின் ஊதியங்கள் குறைக்கப்பட்டன. வாழ்க்கைச் செலவு அதிகரித்த அதே வேளை ஊதியம் அதிகரிக்கப்படவில்லை. இதனால் வறுமைச் சமூகம் உருவாகியுள்ளது. ஊதியக் குறைப்பில் முன்னணி நாடகத் திகழ்வது பிரித்தானியா என்று இன்றைய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவில் சராசரி ஒரு மணி நேரத்திற்கான ஊதியம் 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 5.5 மடங்கால் வீழ்ச்சியடைந்துள்ளது. பிரித்தானியாவில் குவிந்திருக்கும் பல் தேசிய நிறுவனங்கள் சில்லரை வணிகம் போன்ற அடிப்படை வர்த்தகத்தைக் கூட விட்டுவைக்கவில்லை. அனைத்து அதிகாரமும் கொண்ட இந்த நிறுவனங்களின் தொழிலாளர் சட்டங்களைக் கூட மாற்றியமைக்கும் சக்தி வாய்ந்தவை. என்ற நான்கு பிரதான நிறுவனங்களே பிரித்தானிய அரசாங்கத்தின் வரி மற்றும் நிதி ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள். இவர்களின் ஆலோசனையின் அடிப்படையிலேயே வர்த்தகம் குறித்த பிரித்தானி அரசின் கொள்கை வகுக்கப்படுகின்றது. இதே நிறுவனங்களே பல்தேசியப் பெரு நிறுவனங்களின் ஆலோசகர்களும் கூட. இந்த நிறுவனங்களே சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களை அழிப்பதற்கும், மக்களிடமிருந்து அதிக வரி அறவிடுவதற்கும், மலிவான கூலிக்கு உழைப்பைச் சுரண்டிக்கொள்வதற்குமான திட்டங்களை வகுத்துக்கொள்கின்றன. இவ்வாறான பல்தேசியச் சுரண்டலுக்கு ஏற்ற பொறிமுறை பல்வேறு தளங்களிலும் உருவாக்கப்படுகின்றது.