ஐரோப்பா முழுவதும் தொடரும் பொருளாதார நெருக்கடியின் முடிவாக ஐரோப்பா சரிந்து துண்டுகளாக உடையும் நிலை காணப்படுவதாகவும் அதன் விளைவாக பெரும் அரசியல் கிளர்ச்சிகள் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சமூக ஏகாதிபத்தியமாகத் திகழ்ந்த சோவியத் ஒன்றியம் 1991 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உற்பத்தி வளர்ச்சியற்று சிதறியது. சோரோஸ் கூறுவது போலன்றி உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி அற்றுப்போன நிலையில் ஐரோப்பா மட்டுமல்ல அமரிக்கவும் சரியும் நிலையிலேயே காணப்படுகின்றது.
நிதியை மூலதனமாக்கி இந்த நாடுகளில் பல்தேசிய நிறுவனங்கள் நிறுவிய செயற்கையான வளர்ச்சி உற்பத்தியை அழித்தது. இன்று மீள முடியாத நிலையில் புதிய சமூக மாற்றத்தைக் கோரி நிற்கின்றது.