Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐரோப்பிய ஒன்றியம் அவசரக் கூட்டம் – ஆதிக்கப் போட்டியின் பிடியில் இலங்கை

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையைத் தொடர்ந்து இலங்கைக்கு அழுத்தம் வழங்கும் வகையிலான ஐரோப்பியப் பாரளுமன்றக் குழு விவாதம் எதிர்வரும் வியாளன் 12ம் திகதி ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இலங்கை அரசின் மனித் உரிமை மீறல்களும் அதற்கான சட்டவாக்கம்ய்மும் குறித்து இவ்விவாதம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 27 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கெடுக்கும் இவ்விவாதம், இலங்கை அரசிற்கு மேலும் பொருளாதார அழுத்தங்களை வழங்குவது குறித்ததாக அமையும் என எதிர்பார்க்கபடுகிறது.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பிரஞ்சுப் பிரதிநிதி இலங்கை அரசின் போர்க்குற்றங்களை இலங்கை அரசே விசாரணை செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்தார். இலங்கையில் சீன-இந்திய முதலீடுகளுக்கு எதிரான நடவடிக்கையாக இவ்வழுத்ங்கள் எதிர்பார்க்கபட்டாலும் இதற்கான துருப்புச் சீட்டாக நிபுணர் குழுவின் அறிக்கை பயன்படுத்தப்படும் என்பது வெளிப்படையானது.
இதே அமரிக்கப் பிரதிநிதி ரொபேர்ட் ஓ பிளக்கின் இலங்கை வருகையைத் தொடர்ந்த இலங்கை அரசின் அமரிக்க ஆதரவு நிலைப்பாடுகள் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவ்விரு நாடுகளும் ஐக்கிய நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என இலங்கையை முதல் தடவையாக எச்சரித்துள்ளன.

Exit mobile version