Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐரோப்பிய அமரிக்க பொருளாதார நெருக்கடியின் இரண்டாவது கட்டம் ஆரம்பமாகிவிட்டது

EconomicCrisis2010 ஆம் ஆண்டில் வங்கிகளின் நிதி மூலதனச் சரிவின் பின்னர் ஐரோப்பாவின் பங்கு சந்தை 2014 ஆரம்பத்திலேயே பெரும் சரிவை எட்டியுள்ளது. பங்குச் சந்தையின் முதலீடுகள் ஊடாக பண மூலதனத்தைப் பெற்றுக்கொள்ளும் பெரு வியாபார நிறுவனங்கள் உலக நாடுகள் முழுவதும் சுரண்டிக் கொழுக்கின்றன.

ஐரோப்பிய அரசுகள் தமது சிக்கன நடவடிக்கைகள் ஊடாக செயற்கையான வளர்ச்சியை எட்டிவிட்டதாக மக்களுக்குக் கூறிக்கொள்கின்றன. அது பொய்யானது என்பதை ஐரோப்பிய அமெரிக்க பங்குசந்தைகளின் வீழ்ச்சி சுட்டிக்காட்டுகின்றது.

இலங்கை, இந்தியா, சம்பியா போன்ற நாடுகளில் வளங்களைச் சுரண்டி அந்த நாடுகளின் சுற்றுச் சூழலையும் அரசியலையும் மாசுபடுத்தும் பிரித்தானிய நிறுவனங்களில் ஒன்றான வேதாந்தா பங்கு சந்தையில் 3.6 வீதத்தை இழந்துள்ளது. இந்தியாவிலும், சம்பியாவிலும் அவுஸ்திரேலியாவிலும் செப்பு அகழ்வு போதிய பலனைத் தரவில்லை என்கிறது நிறுவனம். மொத்த பங்கு சந்தையும் 1.8 வீத இழப்பைச் சந்தித்துள்ளது. பங்குசந்தையின் இராட்சத நிறுவவங்களான வேதாந்தா, எலெரோலக்ஸ் போன்றவற்றின் இழப்பு ஏனைய நிறுவனங்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதால் இழப்புக்கள் அதிகமாகலாம். இழப்புக்களை எதிர்கொள்வதற்காக இந்த நிறுவனங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாடுகள் மூன்றாமுலக நாடுகளைச் சுரண்டும் வசதியேற்படுத்த போர்களையும் அழிவுகளையும் அதிகரிக்க வாய்ப்புண்டு.

ஏற்கனவே எதிர்வு கூறப்பட்டது போன்று பொருளாதார நெருக்கடியின் இரண்டாவது கட்டம் ஆரம்பமகிவிட்டதற்கன அறிகுறிகளே இவை.

Exit mobile version