முன்னதாக அமரிக்காவின் மக்களை உளவறிந்து கண்காணிப்பது தொடர்பாக தமக்கு எதும் தெரியாது என்றும் பத்திரிகைச் செய்திகளூடாகவே அறிந்து கொண்டதாகவும் ஜேர்மனிய அதிபர் அஞ்செலா மார்கெல் கூறியிருந்தார். ஜேர்மனிய உளவுத்துறை ஆப்லானிஸ்தன் குறித்தே தாம் தகவல் வழங்கியிருப்ப்தாகக் கூறுகிறது.
வெளியான தகவல்களில் ஜேர்மனிய அரச உளவுத்துறையின் 12 உயர் மட்ட உறுப்பினர்கள் அமரிக்க உளவுத்துறையால் அழைக்கப்பட்டதாகவும் தரவுகளைத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்வது குறித்துப் பேச்சுக்கள் நடத்தியதாகவும் தெரியவருகிறது.
ஐரோப்பிய நாடுகளும் அமரிக்க அரசும் தமது மக்களைச் மேலும் சுரண்டுவதற்கு பல்தேசியப் பெரு நிறுவனங்களுக்கு வழிகளைத் திறந்துவிட்டுள்ளன. இந்தச் சுரண்டலுக்கு எதிராக உயிர்பெறக்கூடிய போராட்டங்களை எதிர்கொள்ள மக்கள் மீதான் ஒடுக்குமுறையை த்திவிரப்படுத்திவருகின்றன. இதுவரைக்கும் மூன்றாமுலக நாடுகளின் மக்களைச் சூறையாட அங்கு பாசிச அரசுகளை அமைத்து அனுபவமுள்ள ஐரோப்பிய அரசுகள் தமது சொந்த நாட்டின் எல்லைக்குள்ளேயே மக்களைச் சிறைவைக்கும் இரும்புத்திரையைக் கட்டமைத்து வருகின்றன.